மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுக அரசு அறிவித்தது.  அதன்படி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாட திமுக முடிவு நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில் இதன் தொடக்கமாக கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஆண்டு முழுவதும் நடக்கும் இந்த கொண்டாட்ட விழாவையொட்டி மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.