மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுக அரசு அறிவித்தது.  அதன்படி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாட திமுக முடிவு நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில் இதன் தொடக்கமாக கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக 34 வகை போட்டிகளை நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதில் வினாடி-வினா, கவியரங்கம், கட்டுரை, தொடர் ஓவியங்கள், விளையாட்டுப் போட்டிகள், கருணாநிதி எழுதிய திரைப்பட வசனங்களை ஒப்பித்தல், சட்டத் துறை சார்பில் பேச்சுப் போட்டிகள், ஆங்கில கருத்தரங்குகள் உள்ளிட்டவை அடங்கும். இதோடு ஓராண்டு முழுவதும் மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.