தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 6-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உட்பட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சில இடங்களில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானமேகம் ஊட்டத்துடன் காணப்படும் அவரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும். இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். மேலும் இதன் காரணமாக இன்று முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை மேற்கண்ட பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.