தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 10-ஆம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி நிறைவடிந்தது. இதேபோன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி நிறைவடைந்தது. அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் மாணவர்களுக்கு டிச 24 முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்து ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் போது தேர்வுகள் நடைபெறும் என்றும் பத்தாம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. மேலும் அரையாண்டு தேர்வு நடைபெறும் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தேர்வு தயாராகி சொல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
