தமிழக்தில் இன்று (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மூத்த குடிமக்கள், கர்பிணிகள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான, இன்று (ஏப்.19) அன்று நகரப் பேருந்துகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து வசதி இல்லையெனில், ‘Saksham Mobile App’ அல்லது 1950 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்தால் வாகனம் மூலம் அழைத்துச் செல்லும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.