தமிழகத்தில் சாலை பராமரிப்பு பணிகளில் அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். அதேசமயம் பள்ளம் இல்லாத சாலைகளை பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளில் உள்ள வேகத்தடைகள், வர்ணம் பூசுதல், தேவையான அறிவிப்பு பலகைகள் வைத்து விபத்து ஏற்படாமல் பராமரிக்க வேண்டும் எனவும் மரங்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை வர்ணம் அடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் எனவும் இந்த வேலைகளை மழைக்காலத்திற்கு முன்னதாக செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழைக்காலங்களில் சுரங்கப் பாதைகளில் நீர் தேங்குவதை தவிர்ப்பதற்கு தேவையான நீரேற்று பம்புகளை தயாராக வைக்க வேண்டும். சென்னையில் தற்போது நடைபெற்று வரும் சாலை பணிகளை போர்க்கால அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். மேலும் சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிப்பதற்கு மொபைல் ஆப் எனப்படும் மொபைல் போன் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.