தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாடு, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.