தமிழகத்தில் 200ml ஆவின் பால் பாக்கெட் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200ml ஆவின் பால் இன்று முதல் violet நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஆவின் டிலைட் 500ml பால் பாக்கெட்களில் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை விளக்கம் அளித்துள்ளது.