தமிழகத்தில் கட்டடங்கள் கட்ட பயன்படும் ஆற்று மணலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி முதல் மணல் குவாரிகள் மற்றும் அது தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இதனால் 7000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லோடு மணல் தற்போது பத்தாயிரம் ரூபாய் வரை உயர்த்துள்ளது. இந்த விலை உயர்வால் எம்செண்ட் விளையும் 2500 ரூபாயிலிருந்து நான்காயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.