தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அண்மையில் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சட்டமாக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டினை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 2023 என்ற புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வருகின்றமே 21ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி உள்ளூர் மற்றும் வெளியூர் விளையாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளர் இடம் ஒரு லட்சம் கொடுத்து பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தவறான தகவல்களை கொடுத்து இந்த விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படும் என்றும் நிராகரிப்பு செய்வதற்கு முன்பாக விண்ணப்பம் செய்த அந்த நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.