தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் , பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.