அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது, மாற்றம் வேண்டுமென்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பேராபத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் தமிழ்நாட்டு மக்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம்.
ஆனால் சட்டம் ஒழுங்கை சரிசெய்ய அவகாசம் கேட்கக்கூடாது. திமுக கூட்டணியிடம் கையேந்தி கெஞ்சி ஆட்சியைப் பிடித்துள்ளார் விஜய். 108 தொகுதி தான் உங்களுக்கு கொடுத்திருக்காங்க. ஆட்சியில் இருந்து கொண்டு ரீல்ஸ் ஓட்ட முடியாது. தமிழக வெற்றிக்கழக அரசு தவறான பாதையில் செல்கிறது என்பதை மக்கள் அறிவார்கள் என்று கூறினார். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவறுக்கு மேல் தவறு செய்யக்கூடாது என்றார்.
