மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அதுமட்டுமின்றி, இந்த தேர்தலில் மொத்தமுள்ள இடங்களில் 207 இடங்களை அள்ளிக் கைப்பற்றி பாஜக அங்கு மாஸாக ஆட்சி அமைத்துள்ளது. இதனால் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பயங்கர கிளர்ச்சி வெடித்துள்ளதால், மம்தா பானர்ஜி எம்பி ஆகி தேசிய அரசியலுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் அனல் பறக்கும் பேச்சுக்கள் எழுந்தன.

இதற்காக, முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெஹராம்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதானை தனது பதவியை ராஜினாமா செய்ய வைத்து, அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட ஸ்கெட்ச் போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த  அரசியலையும் அதிரவைத்தன.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சவுரவ் கங்குலியும், யூசுப் பதானும் இணைந்து விளையாடிய பழைய நட்பின் அடிப்படையில், யூசுப் பதானிடம் பேசி எம்பி பதவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்கும் “மெகா தூதுவர்” பொறுப்பை கங்குலியிடம் திரிணாமுல் காங்கிரஸ் ஒப்படைத்ததாகச் செய்திகள் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சவுரவ் கங்குலி, “இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான முட்டாள்தனமான குற்றச்சாட்டு. நான் யாருக்கும் தூது செல்லவில்லை” என்று மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து எம்பி யூசுப் பதானும், “மம்தா பானர்ஜியோ அல்லது கட்சியின் பிற தலைவர்களோ என்னிடம் எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கேட்கவில்லை, மீடியாக்களில் வரும் செய்திகள் முற்றிலும் பொய்” என ஓப்பனாகவே விளக்கம் அளித்துள்ளார்.