தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி தேர்வு முடிவு அடைகிறது. அதே சமயம் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாடத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆப்சென்ட் இல்லாமல் அனைத்து மாணவர்களையும் பங்கேற்க வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர், பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு அறிவித்துள்ள பெரும்பாலான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை செயல்படுத்தி விட்டோம். மீதமுள்ள திட்டங்களையும் விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.