ஒவ்வொரு வருடமும் கோடை காலம் தொடங்கியது முதல் அம்மை நோய் தாக்கத்தின் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். தற்போது தமிழகத்தில் வழக்கத்தை விட மார்ச் மாதத்திலேயே அதிக வெப்பநிலை நிலவி வருவதால் தட்டம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோய் தாக்கம் தொடங்கியுள்ளது. முகம் மற்றும் காது பக்கத்தில் பின்பகுதியில் வேர்க்குரு போன்ற அறிகுறிகளும் சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவுகின்றன. கண்கள் சிவந்து வீக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல் சின்னம்மை நோய் காரணமாக உடலில் நீர் கட்டிகள் போன்ற சிவப்பு சிறிய கொப்பளங்கள் தோன்றும்.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களை இது எளிதில் தாக்க அதிக வாய்ப்புள்ளதால் போதுமான அளவிற்கு நீர், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை குடிக்கவும். பழங்கள் அதிக அளவில் உண்ணவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அதிக வெயில் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.