தமிழகத்தில் அடுத்தடுத்து பேருந்து விபத்துக்கள் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மயிலாடுதுறை குத்தாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
அதாவது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
