தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் 12 வாராந்திர விரைவு ரயில் சேவைகள் நவம்பர் 26 முதல் டிசம்பர் 11 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுடெல்லி மற்றும் புதுச்சேரியிலேயே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் நவம்பர் 26, டிசம்பர் 3 ஆகிய தேதிகளிலும் மறு மார்க்கமாக நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் அந்தமான் விரைவு ரயில் டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 9 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது, சென்னை சென்ட்ரல் மற்றும் லக்னோ விரைவில் டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 7 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது, மதுரை- சண்டிகர் விரைவு ரயில் டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 11 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மதுரை மற்றும் பிகாணேர் விரைவு ரயில் டிசம்பர் 7 மற்றும் டிசம்பர் 10 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.