தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக சேர்ந்து கூட்டணி அமைய இருப்பதாக ஒரு தகவல் புயலை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் பல வருடங்களாக எதிர்கட்சிகளாக இருந்த திமுக மற்றும் அதிமுக தற்போது விஜயை எதிர்ப்பதற்காக ஒன்றாக கைகோர்ப்பது அரசியல் வட்டாரத்தையே புரட்டிப் போட வைக்கும் தகவலாக மாறியுள்ளது. திமுகவின் துணையோடு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் தற்போது இதற்கு வெளிப்படையாகவே எதிர்ப்புகள் கிளம்பிவிட்டது. மேலும் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாக்கூர் தற்போது இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த விஜய்யை. காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது.

RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது. “நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா?Who is a betrayer என்று பதிவிட்டுள்ளார்.