தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கடந்த வருடம் ஜெய்லர் படத்தில் இடம்பெற்ற காவலா பாடலுக்கு நடனமாடியது மிகவும் பிரபலமானது. இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நிலையில் இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த சனிக்கிழமை தன்னுடைய காதலர் விஜய் வர்மாவுடன் சேர்ந்து இரவு நேர கச்சேரி ஒன்றுக்கு நடிகை தமன்னா சென்றுள்ளார். அப்போது அவர்களை புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் தமன்னா தன்னுடைய காதலரை பேபி எனச் செல்லமாக அழைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். மேலும் நடிகை தமன்னா தன்னுடைய காதலரை செல்லமாக அழைக்கும் வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)