தமிழ் சினிமாவில் பருத்திவீரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் அமீர். இவர் அவ்வப்போது படங்களிலும் நடித்து வரும் நிலையில் வடசென்னை படத்தில் அமீரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தில் இயக்குனர் அமீர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ள நிலையில், சாந்தினி, ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடக்கிறார்கள். இந்த படம் அரசியல் பின்னணி கதைக்களத்தோடு உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.