ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்ற இளைஞர், குரோஷியா மற்றும் செர்பியா நாடுகளுக்கிடையிலான டானூப் நதிக்கரையில் உள்ள 125 ஏக்கர் நிலப்பகுதியில் “வெர்டிஸ் குடியரசு” என்ற புதிய நாட்டை 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி உருவாக்கியுள்ளார்.

இப்பகுதியின் உரிமையை எந்த நாடும் கோரவில்லை என்பதை அறிந்து, அந்த நிலப்பகுதியை தானாகவே கைப்பற்றி மைக்ரோநேஷன் (Micronation) என அறிவித்துள்ளார். மேலும், தன்னைவே அதன் அதிபராகவும் அறிவித்து, தனியொரு கொடி, கரன்சி, அமைச்சரவை மற்றும் சுமார் 400 குடிமக்கள் கொண்ட “வெர்டிஸ்” நாட்டை உருவாக்கினார்.

இத்தகைய செயல் சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்ற காரணத்தால், 2023 அக்டோபரில் குரோஷிய அதிகாரிகள் டேனியல் ஜாக்சன் மற்றும் அவரது குடிமக்களை கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்றினர். இதனுடன் அவருக்கு வாழ்நாள் வரையிலான நாட்டில் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜாக்சன், தனது முயற்சிக்கு செர்பிய அதிகாரிகள் ஆதரவாக இருப்பதாகவும், தானது நாடுகடந்த அரசாங்கத்தை தற்போது நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ‘வெர்டிஸ்’ குடியரசு தற்போது இணையதளத்தின் மூலம் தனது கொள்கைகள், பிரமாணங்கள், குடிமக்கள் பதிவு போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை ஒரு சுதந்திரமான நாடாக உலக நாடுகள் ஏற்காவிட்டாலும், பலர் இதனை ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றனர்.

இளம் வயதிலேயே தன்னை ஒரு குடியரசுத் தலைவராக அறிவித்து உலகத்தை வெறித்துப் பார்த்த டேனியல் ஜாக்சனின் இந்த செயல், சமூக வலைதளங்களிலும் பரவலான கவனத்தை பெற்றுள்ளது.