கானா நாட்டின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர ஹெலிகாப்டர் விபத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த இராணுவ ஹெலிகாப்டர், அக்ரா நகரத்தில் இருந்து ஒபுவாசி நோக்கி சென்றபோது, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்துவிட்டது.
அதில் மூன்று ராணுவ வீரர்கள் மற்றும் ஐந்து பயணிகள் இருந்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடம் எங்கு என்பதை உறுதிசெய்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Ghana’s Defence Minister and Environment Minister d!es in a military helicopter crash in Ashanti, k!lling all eight onboard.
(No Refund K1 De Ultimate Iyabo Pjo Vancouver) pic.twitter.com/vZagtIyUQT
— Echoblognaija (@echoblognaija) August 6, 2025
“>
இந்த விபத்தில் மேலும் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் அல்ஹாஜி முனிரு முகமது, மாநில துணை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், மற்றும் தேசிய ஜனநாயகக் காங்கிரஸ் (NDC) கட்சியின் துணைத் தலைவர் சாமுவேல் சர்போங் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.
‘Tragedy In Ghana,’ Helicopter Crashes, Kills Two Ministers, 6 Other Top Officials https://t.co/cbX83HUwyV
— Naijaonpoint (@NaijaOnPoint) August 6, 2025
“>
சம்பவத்தை தொடர்ந்து, ஜனாதிபதி ஜான் மஹாமா, அந்த நாளுக்கான அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, நாட்டில் முழுவதும் அரைக்கம்ப கொடி ஏற்ற உத்தரவிட்டார். பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் முக்கிய பங்கு வகித்த மூத்த அமைச்சர்களை இழந்தது, மகாமா அரசுக்கு பெரும் இழப்பாக உள்ளது.
விபத்திற்கான காரணம் தொடர்பான முழுமையான விசாரணையை கானா இராணுவம் தற்போது முன்னெடுத்து வருகிறது.
