
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவில் முருகேசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோகிராபராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் முருகேசன் ராஜபாளையத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு எட்டு வயது சிறுமியை நோட்டமிட்டார். அவர் சிறுமியிடம் நைசாக பேசி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து ஓடி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகேசனை கைது செய்தனர்.