சமூக வலைதளங்களில் பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் ஒருவருக்கும், வாடிக்கையாளர் பெண்ணுக்கும் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது வீட்டுக்கு வந்த டெலிவரி ஊழியருக்கு மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் கொடுத்துள்ளார்.

ஆனால், தண்ணீர் குடித்த பிறகு அந்த ஊழியர், “நீங்கள் வீட்டில் தனியாக இருக்கிறீர்களா?” என்று கேட்டு அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், இன்ஸ்டாகிராம் ஐடி கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். தன்னைத் தற்காத்துக்கொள்ள அந்த ஊழியரைத் தாம் அறைந்ததாகவும், அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அப்பெண் விவரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பிளிங்கிட் நிறுவனத்திடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட அந்நிறுவனம், அந்த டெலிவரி ஊழியரை உடனடியாகப் பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது போன்ற ஆபத்தான சூழலில் பெண்கள் பயப்படாமல் தைரியமாகச் செயல்பட வேண்டும் என்று அப்பெண் தனது வீடியோ மூலம் வலியுறுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by siyawww (@siyaaspeaks)

“>

இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து இணையவாசிகள் இருவேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டினாலும், பலர் இத்தகைய சூழலில் தெரியாத நபர்களிடம் அதீத தயாள குணம் காட்டுவதைத் தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.