மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர்கள் இடையே கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில், பாஜக தகவல் தொழில் நுட்ப அணியின் கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர் செல்வ பிரபு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இரண்டு தரப்பிலும் நிர்வாகிகளை போட்டி போட்டு இழுக்கும் நிலையில், அதிமுக முந்திக்கொண்டு அண்ணாமலையின் வலது கரமாக செயல்பட்டு வந்தவரை தட்டித் தூக்கியுள்ளது.