டெல்லி மெட்ரோ நிலையம் அருகே, வீடற்ற ஒருவரின் கல்விக்கான போராட்டம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அந்த நபர் சட்டை இல்லாமல், shorts மட்டுமே போட்டு இருந்தபடியே, நோட்புக்கில் ஏதோ எழுதி கொண்டிருப்பதைக் காணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் “thewhatup” என்ற பக்கத்தால் பகிரப்பட்டுள்ளது. “வீடற்ற ஒருவர் மெட்ரோ நிலையத்திற்கு வெளியே படிக்கிறார்” என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த காணொளி இதுவரை 92 ஆயிரம் பார்வைகள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், அந்த நபர் தனது நோட்புக்கை கேமரா நோக்கித் திருப்புவதும், தன்னைப்பற்றி கேட்கும் நபருக்கு பதில் அளிப்பதுபோல் நடப்பதும் காணப்படுகிறது. இது, “வாசிக்க விரும்புபவர் எங்கும், எந்த சூழ்நிலையிலும் படிக்க முடியும்” என்ற பழமொழியை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும் அந்த நபரின் முயற்சியை பாராட்டியுள்ளனர். ஒரு பயனர், “சகோதரரே, வாசகர்கள் எங்கும் படிக்கலாம் என்பதற்கான உயிருள்ள உதாரணம்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சிலர், “இந்த வீடியோ என் அம்மாவுக்கு தெரியக்கூடாது” என்று நகைச்சுவையுடன் கருத்து பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோ நம் சமூகத்தில் கல்விக்கு இடையூறாக இருக்கும் சூழ்நிலைகளை மீறி சாதிக்கக்கூடியது என்பதற்கு சாட்சியாக உள்ளது.
