இந்தியாவில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் கடன் தொகையில் அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுபவர்களுக்கு இனி இந்த புதிய வரம்புகள் தான் வேதவாக்கு. குறிப்பாக, ரூ. 2.5 லட்சம் வரை கடன் தேவைப்படுபவர்களுக்குத் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 85% வரை கடன் கிடைக்கும். அதேசமயம் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்குத் தங்கத்தின் மதிப்பில் 80% மட்டுமே கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான கடன் தொகை தேவைப்படுபவர்களுக்குக் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாகியுள்ளன. இனி ரூ. 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்குத் தங்கத்தின் மதிப்பில் இருந்து அதிகபட்சம் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரம்புகள் தங்கக்கடன் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடன் வாங்கத் திட்டமிடுபவர்கள் இந்த புதிய விகிதங்களைச் சரியாகக் கணக்கிட்டு முடிவெடுப்பது நல்லது.
