இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டின் முக்கிய சந்தைகளான டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரிஸ் ஆகியவற்றில் உள்ள அங்காடிகளில் எதிரொலித்துள்ளது. இந்த தக்காளிகள் தென் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்கா இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது அந்த நாடுகளில் ஏற்பட்ட வெப்பமான காலநிலை காரணமாக பயிர் சரியாக வளரவில்லை. இதனால் தக்காளியை அறுவடை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளுக்கு கூட பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் போனது.

இது குறித்து இங்கிலாந்தின் உணவு இயக்குனர் ஆண்ட்ரூ ஓபி கூறியதாவது “எங்கள் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடிகள் விநியோக சிக்கல்களை தீர்ப்பதில் சிறப்பாக செயல்படுகின்றது. மேலும் அவர்கள் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு காய்கறி தட்டுப்பாடுகளை தீர்த்துக் கொள்வர். இதேபோல் உக்ரைன் போரால் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள விநியோகஸ்தர்கள் காய்கறி கிடப்பதில் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால் அந்த சமயத்தில் முட்டைகளை குறிப்பிட்ட விகிதத்தில் விற்பனை செய்து எப்படியோ பிரச்சனையை சமாளித்துக் கொண்டனர்” என்று கூறியுள்ளார். குறிப்பாக குளிர்காலத்தில் தென் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் இருந்து கிட்டத்தட்ட 90% உணவு பொருட்களை பிரித்தானியா இறக்குமதி செய்வதுண்டு. ஆனால் கோடை காலத்தில் அது தலைகீழாக மாறிவிடுகிறது.