IPL கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 20-ம் தேதியன்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. இதனையடுத்து 267 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய டெல்லி அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை தட்டி தூக்கியது. இந்த போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய ஹைதராபாத் வீரர் நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் காரணமாக போட்டி முடிந்த பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பாக செயல்பட்ட நடராஜனுக்கு, சன்ரைசர்ஸ் அணி, ஒரு பெரிய தங்க சங்கிலி ஒன்று பரிசாககவுரவித்துள்ளது. அவர் 80 பவுன் எடை கொண்ட அந்த தங்க சங்கிலியை அணிந்தபடி, கேக் வெட்டி கொண்டாடும் வீடியோஇணையத்தில்  வைரலாகி வருகிறது. தங்கராசு நடராஜன் என்ற முழுப்பெயர் கொண்ட அவர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.