சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி சென்னை அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் சென்னை அணி 4 வெற்றி மற்றும் 4 தோல்வியென புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது.