மொபைலின் வடிவமைப்பு என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக ட்ரெண்டாகும். அதில் மடிக்கும் வகையில் இருக்கும் ஃபிளிப் மாடல் மொபைல் பல வருடங்கள் முன்னரே டிரெண்டாகி இருந்தாலும், அது இப்போது மீண்டும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

அதன்படி, 90 ஆயிரம் ரூபாய் விலையில் Oppo Find N2 Flip ஆனது 6.8 இன்ச் மெயின் டிஸ்ப்ளே மற்றும் 3.26 இன்ச் செகண்டரி ஸ்கிரீன் கொண்டு உள்ளது. இது Dimensity 9000+ SoC வாயிலாக இயக்கப்படுகிறது மற்றும் 4,300 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இதையடுத்து Samsung Galaxy Z Flip 5 மொபைல் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது 6.7 இன்ச் முதன்மை AMOLED டிஸ்ப்ளே மற்றும் பெரிய 3.4 இன்ச் செகண்டரி பேனல் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC வாயிலாக இயக்கப்படும் மற்றும் சுமார் ரூ.90 ஆயிரத்திற்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின் Motorola Razr 40 Ultra 5G அடுத்தமாத துவக்கத்தில் அறிமுகமாகும். இது 3.6 இன்ச் பெரிய 2ம் நிலை திரையுடன் வரும். 6.79 இன்ச் மெயின் டிஸ்ப்ளே மற்றும் 165 Hz Refresh விகிதத்தினை இந்த மொபைல் கொண்டுள்ளது. இந்த மொபைல் சாதனம் Snapdragon 8+ Gen 1 SoC வாயிலாக இயக்கப்படும். இதன் விலையானது சுமார் ரூ.70 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து Motorola Razr 40 5G ஆனது Razr 40 Ultra உடன் அறிமுகமாகும். இதில் Razr 40 Ultra இருக்கும். அதோடு 6.9-இன்ச் மெயின் டிஸ்ப்ளே மற்றும் சிறிய 1.5-இன்ச் 2-ஆம் நிலை திரையைக் கொண்டிருக்கும். Snapdragon 7 Gen 1 SoC வாயிலாக இயக்கப்படும் இந்த மொபைல் ரூ. 50 ஆயிரம் பிரிவின் கீழ் வரும் என தகவல் தெரிவிக்கிறது.