சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொது நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் திமுக ஆட்சியில் வீட்டு வரி மற்றும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது ஏன்? எழுதாத பேனாவுக்கு 82 கோடி செலவில் கடலில் சிலை வைக்கின்றனர். 2 கோடியை சிலை வைப்பதற்கு செலவிட்டு விட்டு மீதி உள்ள 80 கோடியை மாணவர்களுக்கு பயன்படுத்தலாமே? என்ற கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற நல்ல திட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.