இங்கிலாந்தின் டார்செட் கவுண்டி பகுதியில் பல தீவுகள் அமைந்துள்ளது. அதில் ஒன்று பிரவுன்சீ  தீவு. இந்த தீவில் உள்ள ஒரு பகுதியில் டைனோசரின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுமார் 140 மில்லியன் வருடம் பழமை வாய்ந்த கால் தடம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அந்த கால்தடத்திற்கு சொந்தமான டைனோசர் இகுனாடோன்ட்சியன் வகையை சேர்ந்தது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று விரல்களை கொண்ட அந்த டைனோசர் கால் தடத்தை வனத்துறை அதிகாரி ஒருவர் பிரவுன்சீ காஸ்டில் பகுதியில் கண்டுபிடித்துள்ளார்.