கழிவு நீரை எரிபொருளாக்கும் சாதனத்தை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

அசுத்தமான நீர் அல்லது கடல் நீரை சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருளாகவும் சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றும் புதிய சாதனத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சூரிய சக்தியால் இயங்கும் இந்த எளிய சாதனம் அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளுக்கு மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்போது கண்டுபிடித்துள்ள புதிய சாதனத்தை அசுத்தமான தண்ணீரில் பயன்படுத்தலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.