சமீப காலமாக டிஜிட்டல் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு ஊடகவியலாளர் சைபர் திருடனிடம் இருந்து நேரடியாக ரூ.10,980 பணம் பெற்றுச் சிக்கலில் இருந்தவரை திட்டமிட்டு சமாளித்த சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி தனது திருமண நாளன்று, ஊடகவியலாளர் பூபேந்திர சிங்கிற்கு வந்த ஒரு அழைப்பில், நபர் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்தி, அவரை ஆபாச புகைப்பட வழக்கில் கைது செய்துள்ளதாக கூறியுள்ளார். பின்னர் ரூ.16,000 கேட்ட அந்த நபரிடம் சந்தேகம் ஏற்பட்ட பூபேந்திர, கூகுள் லென்ஸ் மூலம் படங்களைச் சரிபார்த்து மோசடி என உறுதி செய்தார்.
பின், தன்னை ஏழையாக காட்டிய பூபேந்திர, பழைய அடகு சீட்டை காட்டி நகையை மீட்டுக் கொடுக்க பணம் இல்லை என கூற, அந்த நபர் முதலில் ரூ.3,000 அனுப்பியுள்ளார். பின்னர், மேலும் பணம் தேவைப்படுவதாகக் அவர கூற பின்னர் ரூ.4,980 அனுப்பினார். இதைத்தொடர்ந்து 3,000 ருபாய் அனுப்பினார். அதன்படி மொத்தமாக ரூ.10,980 வரை திருடனிடமிருந்தே பெற்றுள்ளார். இதற்கிடையில், தனக்கு கடன் பெறும் கட்டணம் தேவை என சாட்சியத்துடன் விளக்கிக் கூறியுள்ளார். அதன் பின்னர் திருடன் தொடர்ந்து அழைத்தபோதும் பூபேந்திர அவருடைய அழைப்புகளைத் துண்டித்து, அதற்கான சாட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் குறித்து கான்பூர் காவல் கமிஷனர் அகில் குமார் கூறியதாவது: “புகார்தாரரும், மோசடியில் ஈடுபட்ட நபரும் இடையிலான பேச்சுக்கள், பண பரிவர்த்தனைகள், வங்கி விவரங்கள், வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். இந்த வழக்கு தற்போது சைபர் குற்றவியல் விசாரணை பிரிவின் கீழ் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. பொதுமக்கள் இவ்வாறான மோசடி அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். நேரடியாக சந்திக்க முயல்வது ஆபத்தாக இருக்கலாம்,” என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
