ஆலங்குளம் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த சீமான், கொளுத்தும் வெயிலுக்கு இதமாகத் தொண்டர்கள் கொடுத்த பதநீரை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிப் பருகினார். பதநீரைக் குடித்த கையோடு அங்கிருந்த மக்களைப் பார்த்து, “யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க… இது கல்லு இல்ல, பதநீர்தான்!” என்று தனக்கே உரிய பாணியில் வேடிக்கையாகக் கூறினார். சீமானின் இந்த எதார்த்தமான பேச்சும், உடல்மொழியும் அங்கிருந்த தொண்டர்களைச் சிரிக்க வைத்ததுடன், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
எப்போதும் ஆவேசமாகப் பேசும் சீமான், இடையில் இப்படிச் சின்னச் சின்ன கிண்டல்களுடன் மக்களிடம் உரையாடுவது அவரது பிரச்சாரங்களுக்குத் தனி வரவேற்பைப் பெற்றுத் தருகிறது. குறிப்பாக, பனை மரப் பொருட்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசி வரும் அவர், மேடையிலேயே பதநீர் அருந்தி அதைப் பற்றி ஜாலியாகப் பேசியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
