மதுக்கடை ஒன்றில் (Bar) பூல் கேம் விளையாடிக் கொண்டிருந்த தம்பதியினரிடையே, போதையில் இருந்த நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டதும், அதற்கு அந்தப் பெண்ணின் கணவன் கொடுத்த ‘நாக்-அவுட்’ அடியும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு தம்பதியினர் பூல் டேபிள் அருகே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முற்றிலும் போதையில் இருந்த ஒரு நபர், அங்கு வந்து அந்தப் பெண்ணிடம் தவறான முறையில் அநாகரீகமாக நடக்க முயன்றுள்ளார்.
தன் மனைவியிடம் அந்த நபர் அநாகரீகமாக நடந்ததைக் கண்ட கணவன், ஒரு நொடி கூட தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் அவர் மீது பாய்ந்தார். ஆத்திரத்தின் உச்சியில் இருந்த கணவன், அந்த நபரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். அந்த ஒரே அடியில், போதையில் இருந்த நபர் நிலைகுலைய கீழே விழுந்து மயங்கினார். மீண்டும் அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை.
இந்த கைகலப்பின் போது, எதிர்பாராத விதமாகப் பூல் ஸ்டிக் பட்டு அந்தப் பெண்ணுக்கும் லேசான அடி விழுந்தது. இருப்பினும், மனைவியின் கௌரவத்தைக் காக்க கணவன் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை அங்கிருந்தவர்களை அதிர வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், இணையவாசிகள் இரண்டு பிரிவாகத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
A drunk guy grabbed a guys wife ass in front of him… Is this the only way to respond? pic.twitter.com/IVOkQLnVFm
— Insane Vids (@Insanevidz_) April 26, 2026
தன் மனைவியிடம் தவறாக நடந்தவனுக்குத் தகுந்த பாடம் புகட்டியுள்ளார். இது நியாயமான ஆத்திரம்,” எனப் பெரும்பாலோர் அந்தப் பெண்ணின் கணவனை ‘ஹீரோ’வாகக் கொண்டாடுகின்றனர். இருப்பினும் சட்டம் கையில் இருக்கையில், இப்படியான தாக்குதல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்; பேசித் தீர்த்திருக்கலாம்,” எனச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த உடனே பார் ஊழியர்கள் அந்தத் தம்பதியை வெளியேறச் சொன்னாலும், சமூக வலைதளங்களில் கணவனின் இந்த அதிரடிச் செயலுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இது ஒரு ஆண்டுக்கு முந்தைய பழைய வீடியோ எனக் கூறப்பட்டாலும், தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
