பிரேசில் நாட்டில் ஐந்து பேருடன் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று, குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே நடந்த இந்த கோர விபத்தில், விமானத்தை ஓட்டிச் சென்ற பைலட் மற்றும் கோ-பைலட் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின் போது காயமடைந்த மற்ற மூன்று பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. விமானம் மோதிய வேகத்தில் அந்த மூன்று மாடி கட்டிடத்தின் சுவரில் விமானத்தின் பாகங்கள் சிக்கிக் கொண்டன. அதிர்ஷ்டவசமாக அந்த கட்டிடத்தில் வசித்து வந்த பொதுமக்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
<a href=”http://
New video shows the moment the small plane crashed west of São Paulo, Brazil, this morning 👀pic.twitter.com/cjKSSlhuNb
— Volcaholic 🌋 (@volcaholic1) February 7, 2025
“>
தற்போது காயமடைந்த மற்ற இரண்டு பயணிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட பகீர் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
