டெல்லியில் இன்று முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.