தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக சிபிஐ-க்கு ஒரு முக்கியக் கடிதத்தை எழுதியுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மூன்று முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார் விஜய். ஆனால், தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசியல் களம் ஜெட் வேகத்தில் சுழலத் தொடங்கியுள்ளது.
வேட்பாளர் தேர்வு, தேர்தல் பரப்புரை என அடுத்தடுத்து முக்கியமான தேர்தல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், விசாரணைக்காக டெல்லி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, “தேர்தல் பணிகள் இருப்பதால், இனி கரூர் விவகாரம் தொடர்பான விசாரணையை சென்னையிலேயே நடத்த வேண்டும்” என்று ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் சிபிஐ-க்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விஜய்யின் இந்த அதிரடி கோரிக்கை டெல்லி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
