கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு கன்னடத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலமே ராஷ்மிகா இந்திய அளவில் பிரபலமானார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அதன் பிறகு டியர் காம்ரேட் என்ற படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாகவே பல காலங்களாக செய்திகள் பரவி வரும் நிலையில் இருவரும் இதனை உறுதிப்படுத்தவில்லை.
அதே நேரத்தில் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து முடிந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது திருமணம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு மாளிகையில் இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து இருவரும் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
