சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இளம் வீரர் அபிஷேக் சர்மாவை பேருந்து பயணத்தின் போது கடுமையாகச் சாடியதாக அந்தத் தகவல் பரவி வருகிறது.
மேலும் “உன்னை நம்புனதுக்கு இப்படி பண்ணிட்டியே” என்பது போன்ற தொனியில் கம்பீர் ஆவேசமாகப் பேசுவது அந்த வீடியோவின் பின்னணியாகக் கூறப்படுகிறது. சமீபத்திய போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு அபிஷேக் சர்மா விளையாடாததே கம்பீரின் இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
Gautam Gambhir started coaching Abhishek Sharma right there on the team bus. But sir, please stop this show in front of the cameras. You should have learned from Rohit Sharma how to explain things to a player, how to build their confidence, and how to bring out their best… pic.twitter.com/MmBKCRqY6d
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) February 23, 2026
“>
இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. கம்பீர் பொதுவாகவே கண்டிப்பான பயிற்சியாளர் என்றாலும், பொதுவெளியில் வீரர்களை விமர்சிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது ஒரு சாதாரண உரையாடலா அல்லது உண்மையிலேயே கடுமையான கண்டிப்பா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தச் சம்பவம், தற்போது வைரலாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
