டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக பத்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்று மாசுபாடு ஏற்படுவதை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டீசல் வாகனம் வாங்குவோருக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டீசல் வாகனம் பயன்பாட்டை படிப்படியாக அவற்றை இதுவே ஒரே வழி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மின்சாரம் மற்றும் சிஎன்ஜி வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2027 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் டீசல் வாகனங்கள் தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.