10-வது டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் மூன்று தொடர்களில் இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் தென்னாபிரிக்காவிடம் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த தோல்வியை சரி செய்யும் விதமாக நேற்று ஜிம்பாவேக்கு எதிரான போட்டியில் 256 ரன்கள் எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியாவின் அரை இறுதிக் கனவு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அடுத்ததாக வெஸ்ட் இண்டிஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த அணியையும் வீழ்த்தினால் இந்தியா அரையிறுதிக்கு வெற்றி பெறுவது கட்டாயம். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா மோதும் போட்டிகள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும். அப்படி வழங்கும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் இருப்பதால் அந்த அணியே அரையிறுறதுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பில்லை. மேலும் கொல்கத்தாவில் போட்டி நடைபெறும் நாளில் மழைக்கு வாய்ப்புள்ள என வானிலை மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
