
கேரள மாநிலம் கண்டல்லூர் பகுதியில் தங்கச்சன்-சிந்து தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதித்தன் (13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் சம்பவ நாளில் மாலை நேரத்தில் டிவி பார்ப்பதற்காக தன் தாயிடம் ரிமோட் கேட்டுள்ளான். ஆனால் டிவி ரிமோட்டை கொடுக்க அவருடைய தாயார் மறுத்துவிட்டார். இதனால் தன் அம்மாவிடம் கோபித்துக் கொண்ட சிறுவன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டான்.
இரவில் கூட சிறுவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. இருப்பினும் சிறுவன் கோபமாக இருப்பான் என எண்ணி அதை குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை ஆகியும் சிறுவனின் அறை பூட்டி கிடந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையை சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கினான். இதை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.