திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவரின் அராஜகம் தற்போது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநரிடம், “ஏன் இவ்வளவு வேகமா போறீங்க?” என்று பயணி ஒருவர் நியாயமாகக் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஓட்டுநர், அந்தப் பயணியை சகட்டுமேனிக்குத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரைத் தாக்கவும் செய்துள்ளார்.

உடன் இருந்தவர்கள் தடுத்தும் அந்த ஓட்டுநர் அடங்குவதாகத் தெரியவில்லை. இந்தத் திகில் வீடியோ தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி, பொதுமக்களின் கண்டனத்தைப் பெற்று வருகிறது.