ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து இ-சிகரெட் (Vape) பயன்படுத்தியது நேரலையில் கேமராக்களில் சிக்கியது. இது ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் (Article 2.21) “விளையாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்” எனக் கருதப்படுகிறது.
இந்தத் தவற்றை ஒப்புக்கொண்ட ரியான் பராக்கிற்கு, அவரது ஒரு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் மற்றும் ஒரு டிமெரிட் பாயிண்ட் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இ-சிகரெட் உற்பத்தி மற்றும் பயன்பாடு 2019-லேயே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு முக்கிய கிரிக்கெட் வீரர் அதனைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வீரர்களின் ஒழுக்கத்தைக் கண்காணிக்க பிசிசிஐ கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
