ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸ் அணியை ராய்ப்பூரில் எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், ஆர்சிபி உடை மாற்றும் அறையில் விராட் கோலியுடன் ஷர்துல் தாக்கூர் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஷர்துல் தாக்கூர் தற்போது வேறு அணியில் விளையாடி வரும் சூழலில், அவர் ஆர்சிபி முகாமிற்குள் நுழைந்தது ரசிகர்களிடையே குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. “ஆர்சிபி முகாமில் ஒரு ஒற்றனா?” என்ற ரீதியில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

“>

இருப்பினும், இந்தச் சந்திப்பு வெறும் நட்பு ரீதியிலானது என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் நீண்ட காலம் ஒன்றாக விளையாடிய கோலியும் தாக்கூரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், போட்டிக்கு முன்னதாக ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.

இந்நிலையில் களத்தில் இரு அணிகளும் தீவிரமாக மோதிக்கொண்டாலும், அதற்கு வெளியே வீரர்களிடையே இருக்கும் இந்த ஆரோக்கியமான நட்பு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. இந்த சுவாரசியமான தருணம் தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விவாதிக்கப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது.