தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசிய நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைவது ஏற்கனவே உறுதியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, அதிமுக தலைமையிலேயே கூட்டணி அமையும் என்றும், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் தற்போது டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்துப் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அமமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் தமிழகத் தேர்தல் களம் புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.