தற்பொழுது டிசம்பர் மாதம் முடிவடைந்து புது வருடம் 2024 பிறக்க இருக்கிறது. எனவே புத்தாண்டிற்கு முன்பாக பணம் தொடர்பான முக்கிய வேலைகள் அனைத்தையும் முடித்து விட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த விதிமுறைகளில் ஏராளமான மாற்றங்கள் வரும். அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வங்கி கணக்கு இருந்தால் முக்கியமான வேலை பாக்கியிருக்கிறது. அதை உடனே செய்து முடிப்பது நல்லது. அதாவது டிசம்பர் மாத தொடக்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு  அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் கேஒய்சி சரிபாரத்தை சரியான நேரத்தில் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஒருவேளை இன்னமும் அந்த வேலையை செய்யாவிட்டால் அதை உடனே முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆர்பிஐ வங்கியின் வழிகாட்டுதலின்படி அனைத்து வாடிக்கையாளர்களும் சரிபார்ப்பை முடிக்க வேண்டியது அவசியம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. எனவே டிசம்பர் 18ஆம் தேதிக்கு முன் வங்கிக்கு நேரில் சென்று kyc சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.